நயன்தாராவின் ‘அறம்’ படத்துக்காக புதிய இசை யுக்தியை கையாளும் ஜிப்ரான்!
நயன்தாரா நடிப்பில், கோபி நயினார் இயக்கத்தில், கேஜேஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் விரைவில் வெளிவரவுள்ள படம் ‘அறம்’.
இசையமைப்பாளர் ஜிப்ரான் இந்த படத்தின் பின்னனி இசையமைப்பிற்காக, ஒரு முன்னணி இசை நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளார். லார்ட் ஆப் தி ரிங்ஸ், ஹரி பாட்டர், கேம் ஆம் தோரோன்ஸ் உள்ளிட்ட பல பிரமாண்ட தயாரிப்புகளுக்கு பின்னணி இசை தயாரான தி பி.கே.எப் ப்ரேக் பில்ஹார்மோனியா (The PKF – Prague Philharmonia) ஆர்கேஸ்ட்ரா குழுவுடன் இணைந்து ‘அறம்’ படத்திற்கான இசை வேலைகளை தொடங்க ஆயத்தமாகியுள்ளார்.
கமல்ஹாசன் ஆசியுடன் ‘உத்தமவில்லன்’ படத்தின் மூலம் தனது தனித்துவமான இசையினால் உலகெங்கும் விருதுகளை அள்ளி தனக்கென தனி முத்திரை பதித்துக்கொண்ட ஜிப்ரானின் இந்த புதிய முயற்சி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும், எதிர்பார்ப்பையும் கூட்டியுள்ளது.
இன்றைய வாழ்வாதாரத்திற்கான முக்கிய பிரச்சனையை கூறும் ‘அறம்’ திரைப்படத்திற்கு மேலும் மெருகூட்ட இந்த புதிய யுக்தியை மேற்கொண்டுள்ளார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.