சென்னையின் மற்றொரு பக்கத்தை பிரதிபலிக்கும் படம் மீரா கதிரவனின் ‘விழித்திரு’
ஒரே இரவில் நடக்கும் சம்பவங்களை மையமாகக் கொண்டு இயக்குநர் மீரா கதிரவன் உருவாக்கி இருக்கும் திரைப்படம் ‘விழித்திரு’.
கிருஷ்ணா – விதார்த் – வெங்கட் பிரபு என மூன்று கதாநாயகர்கள் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ‘விழித்திரு’ திரைப்படத்தை, ‘ஹாயா மரியம் பிலிம் ஹவுஸ்’ சார்பில் மீரா கதிரவனும் அவருடைய நண்பர்களும் இணைந்து தயாரித்து இருக்கின்றனர்.
இப்படம் குறித்து மீரா கதிரவன் கூறுகையில், “சென்னை மாநகரத்திற்கு இரண்டு முகங்கள் இருக்கின்றன. பகலில் எப்போதும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் சென்னையின் ஒரு முகத்தை தான் நாம் இதுவரை பார்த்து இருக்கிறோம். ஆனால் நாம் யாரும் இதுவரை கண்டிராத, இரவில் குணாதியசத்தை மாற்றிக்கொள்ளும் சென்னையின் மற்றொரு முகத்தை ரசிகர்கள் எங்களின் ‘விழித்திரு’ திரைப்படம் மூலம் காண்பார்கள்.
எப்படி ஒரு இரவு, நான்கு பேரின் வாழக்கையை மாற்றுகிறது என்பது தான் ‘விழித்திரு’ படத்தின் ஒரு வரி கதை. அது மட்டுமின்றி, இரவு என்றாலே நம் ஞாபகத்திற்கு வருவது போலீஸ்காரர்களின் ரோந்து வானங்கள் தான். அந்த ரோந்து வாகனங்களுக்கும், எங்கள் ‘விழித்திரு’ படத்தின் கதைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அது என்ன என்பதை படத்தை பார்க்கும்பொழுது ரசிகர்கள் தெரிந்து கொள்வார்கள்” என்கிறார் இயக்குநர் மீரா கதிரவன்.