நெடுவாசல் பலா மரத்தடியில் சிரிச்சுக்கிட்டு இருக்கார் அப்துல் கலாம்!

நெடுவாசலுக்கு சரத்குமார் வந்திருந்தார். வெளில வந்து, “சைட் சுத்தி பாத்தேன். டிஎம்டி முறுக்கு கம்பில தளம் போட்டுத்தான் ட்ரில் பண்ணிருக்காங்க. சோ… உறுதியா இருக்கும். விவசாயிகள் பயப்பட வேணாம்”னு கூடங்குளம் மாதிரி ஏதும் உளறி கொட்டாம இருந்தா சரி. புதுக்கோட்டை கிராம மக்கள் கவனமா இருக்கணும்.

காலம் தான் எவ்வளவு மாறிப் போச்சு.. “ஹைட்ரோ அரக்கனிடம் இருந்து மண்ணை காப்போம்”னு அப்துல் கலாம் சிரிச்சுக்கிட்டு இருந்தாரு ஒரு பலா மரத்தடியில். “நாட்டின் வளர்ச்சி பாஸ்”னு அணுஉலைக்கு ஆதரவா நின்ன அவரோட ரசிகர்கள், இப்போ  “சுற்றுச்சூழலை, விவசாயத்தை காப்போம்”னு வந்து நிக்கிறாங்க.

ஒரு விதையும் வீணாகல. கூடங்குளம் அணு எதிர்ப்பு பிரச்சாரத்தில் ஆரம்பித்து, நியூட்ரினோ, வடபழஞ்சி, மீத்தேன், என்று “வளர்ச்சி”யின் பக்கம் நின்றவர்களைத் தொடர்ந்து  சண்டையிட்டு, நெடுவாசல் நோக்கி திருப்பியதில் தமிழ்த் தேசிய பெரியாரிய இடதுசாரி  இயக்கங்களின் உழைப்பு அளப்பரியது.

ANBE SELVA