“இதை யாராவது சிவகுமாரிடம் சொல்ல முடியுமா…?”

மேலோட்டமான பார்வைக்கு பிரமாதமாக தோன்றும் ‘நதிகள் இணைப்புத் திட்டம்’ உண்மையில் மோசமானது; சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கக் கூடியது. ஆகவே, நதிகள் இணைப்புத் திட்டம் வேண்டவே வேண்டாம் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இது தெரியாமல், என்றைக்கோ, யாரோ சொன்னதை இன்றும் நம்பிக்கொண்டிருக்கும் நடிகர் சிவகுமார், “செவ்வாய் கிரகத்துக்கு ராக்கெட் விடுவதா முக்கியம்? நதிகள் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்துவதே அவசியம்” என்கிற ரீதியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக பூவுலகின் நண்பர்கள் அமைப்பை சேர்ந்த SUNDAR RAJAN பதிவு:-

“யாராவது சிவகுமார் அவர்களிடம் சொல்ல முடியுமா?

சாத்தியமில்லாத, தேவையுமில்லாத நதிகள் இணைப்பு திட்டத்தை ஆதரிக்க வேண்டாம் என்று….

பலமுறை பூவுலகின் நண்பர்கள் சார்பில் நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு எதிராக பொதுவெளியில் பல்வேறு விசயங்களை எடுத்து வைத்துள்ளோம். கவிக்கோ அரங்கத்தில் ஒரு விவாத அரங்கம் நடத்தினோம், தொடர்ந்து சொல்லியும் எழுதியும் வருகிறோம், ஆனாலும் இந்த திட்டம் மறுபடியும் மறுபடியும் பொது விவாதத்திற்கு வருகிறது.

நதிகள் இணைப்பு திட்டம் தொடர்பாக யாருடனும் விவாதிக்க, உரையாட தயாராக இருக்கிறோம்…”