எடப்பாடி பழனிச்சாமி அமைச்சரவை: பட்டியல் வெளியீடு!
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/2017/02/0-48.jpg)
எடப்பாடி பழனிசாமி தலைமையிலான 31 பேர் கொண்ட தமிழக புதிய அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஓபிஎஸ் முதல்வராக இருக்கும்போது இருந்த அமைச்சரவை பட்டியலில், முதல்வர் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் என்று இருவர் மட்டுமே மாற்றப்பட்டுள்ளனர்.
ஓபிஎஸ் பதவி வகித்த துறைகளை எடப்பாடி பழனிசாமி கவனிப்பார் என்றும், ஏற்கெனவே அவர் கவனித்து வந்த பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறையை கூடுதலாக கவனிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாஃபா பாண்டியராஜன் பதவி வகித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சுமார் நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு செங்கோட்டையன் அமைச்சர் ஆகியிருக்கிறார்.
31 அமைச்சர்களின் பட்டியல்
எடப்பாடி பழனிசாமி – முதல்வர் – பொதுநிர்வாகம், காவல், நிதி, பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை
திண்டுக்கல் சீனிவாசன் – வனத்துறை அமைச்சர்
செங்கோட்டையன் – பள்ளிக் கல்வித்துறை, விளையாட்டு, இளைஞர் நலத்துறை அமைச்சர்
செல்லூர் ராஜூ – கூட்டுறவுத்துறை அமைச்சர்
தங்கமணி – மின்சாரத்துறை அமைச்சர்
வேலுமணி – ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை அமைச்சர்
ஓ.எஸ்.மணியன் – கைத்தறித்துறை அமைச்சர்
அன்பழகன் – உயர் கல்வித்துறை அமைச்சர்
சரோஜா – சமூக நலத்துறை அமைச்சர்
சி. விஜயபாஸ்கர் – சுகாதாரத்துறை அமைச்சர்
ஜெயக்குமார் – மீன்வளத்துறை அமைச்சர்
எம்.ஆர். விஜயபாஸ்கர் – போக்குவரத்துத் துறை அமைச்சர்
நிலோபர் கபில் – தொழிலாளர் நலத்துறை அமைச்சர்
சி.வி.சண்முகம் – சட்டம், சிறைத்துறை அமைச்சர்
கருப்பணன் – சுற்றுச்சூழல் துறை அமைச்சர்
காமராஜ் – உணவுத்துறை அமைச்சர்
ஆர்.பி. உதயகுமார் – வருவாய்த்துறை அமைச்சர்
எம்.சி.சம்பத் – தொழில்துறை அமைச்சர்
உடுமலை ராதாகிருஷ்ணன் – வீட்டு வசதித்துறை அமைச்சர்
பாலகிருஷ்ண ரெட்டி – கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்
எஸ்.வளர்மதி – பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலன் துறை அமைச்சர்
பாஸ்கரன் – கதர் மற்றும் கிராமத் தொழில் துறை அமைச்சர்
சேவூர் எஸ் ராமச்சந்திரன் – இந்து சமய, தமிழ் ஆட்சி மொழி அமைச்சர்
கே.சி.வீரமணி – வணிக வரித்துறை அமைச்சர்
துரைகண்ணு – வேளாண் துறை அமைச்சர்
வெல்லமண்டி நடராஜன் – சுற்றுலாத்துறை அமைச்சர்
பெஞ்சமின் – ஊரக தொழில் துறை அமைச்சர்
ராதாகிருஷ்ணன் – வீடு, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்
ராஜேந்திர பாலாஜி – பால்வளத்துறை அமைச்சர்
கடம்பூர் ராஜூ – தகவல் செய்தித் தொடர்புத் துறை அமைச்சர்
மணிகண்டன் – தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர்
ராஜலட்சுமி – ஆதிதிராவிடர் நலன் துறை அமைச்சர்