“அடேய்… கொஞ்சம் கேப் விடுங்கடா…!”
சுவாதிய கொன்னாய்ங்க…
அவசர அவசரமா ராம்குமார கொன்னாய்ங்க…
ஜெயலலிதாவை ஆஸ்பத்திரில போட்டாய்ங்க..
கடைசில ஜெயலலிதாவை ஒரேயடியா போட்டாய்ங்க…
பதட்டத்தோட பதட்டமா பன்னீர முதல்வதராக்குனாய்ங்க..
சோகத்தோட சோகமா சின்னம்மாவ பொதுச்செயலாளர் ஆக்குனாய்ங்க..
ஜல்லிக்கட்டுடான்னு ஆர்ப்பரிச்சாய்ங்க…
ஆர்ப்பரிச்ச கூட்டத்த சாத்துசாத்துனு சாத்துனாய்ங்க…
குப்பத்தெல்லாம் கொளுத்துனாய்ங்க…
எண்ணூர்ல கப்பல ஒடச்சு எண்ணெய்க்கழிவ ஊத்துனாய்ங்க…
ஊத்துனத அள்ள அமெரிக்காவுல இருந்து வாளி வாங்குனாய்க…
அசந்த நேரத்துல சின்னம்மா முதல்வர்னாய்ங்க….
ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்…… யப்பாடானு பொங்கி முடிச்சா…
இந்தா வந்துட்டாய்ங்க… சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்புன்னு….
அடேய்… கொஞ்சம் கேப் விடுங்கடா…! எங்களுக்கும் குடும்பங்குட்டி இருக்குடா…! எப்ப பார்த்தாலும் உங்களோடயே குடும்பம் நடத்த முடியுமாடா…?
ஊடவியலாளர்களின் கண்ணீர் கதை…!
(படித்ததில் பிடித்தது)