ஜல்லிக்கட்டை எதிர்த்த கிரண் பேடியை மேடையிலேயே மூக்குடைத்த ஆர்ஜே பாலாஜி!

புதுவை துணைநிலை ஆளுநரும், மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்தவருமான கிரண் பேடி, சென்னையில் நடைபெற்றுவரும் இந்தியா டுடே நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசினார். “ஜல்லிக்கட்டு என்ற பெயரில் மாடுகள் சித்ரவதை செய்யப்படுகின்றன. உச்சநீதின்றம் தடை செய்தது சரி” என்றார் அவர்.

அதே விவாத நிகழச்சியில் கலந்துகொண்ட ஆர்ஜே பாலாஜி குறுக்கிட்டு தனக்கே உரிய பாணியில், ”நீங்க காலில் போட்டிருக்கும் செருப்பு லெதர் செருப்பு. அது எதிலிருந்து வந்தது? மாட்டை அறுத்து அதன் தோலை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களை முதலில் தடை செய்யுங்கள். அது சித்ரவதை இல்லையா?” எனக் கேள்வி கேட்டதும்,. அமர்ந்திருந்த கூட்டத்தினர் அனைவரும் ஆரவாரத்துடன் கைதட்டினர்.

“உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும் என்கிறார்கள். தமிழ்நாட்டிற்கு காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று கர்நாடகாவுக்கு சொல்லியது உச்சநீதிமன்றம். அதை யார் மதித்தது? மதிக்காதவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?” எனவும் ஆர்ஜே பாலாஜி கிரண் பேடியை பார்த்து கேட்டார்.

“நான் குஜராத் சென்றிருந்தேன். அங்கே ஒட்டகங்கள் மீது கடுமையான சுமைகொண்ட மூட்டைகளை ஏற்றி சுமக்க வைக்கிறார்கள். அது சித்ரவதை இல்லையா? அதை தடை செய்ய முடியுமா?” எனவும் கிரண் பேடியை பார்த்து ஆர்ஜே பாலாஜி கேள்வி எழுப்பினார்.

மூக்குடைபட்ட கிரண் பேடி, தகுந்த பதில் அளிக்க இயலாமல் வாயடைத்துப் போனார்.