கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரித்தார் ரஜினிகாந்த்!
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/0a1e-5.jpg)
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு கடந்த 1ஆம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்ததில் உடல்நிலை சீரடைந்து வந்தது.
ஒருவார கால சிகிச்சைக்குப் பிறகு கருணாநிதியின் உடல்நிலை தேறியதை தொடர்ந்து கடந்த 7ஆம் தேதி இரவு அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, வீடு திரும்பினார்.
அவர் ஓய்வெடுக்க வேண்டும் என டாக்டர்கள் அறிவுரை கூறியிருப்பதாக அறிக்கை வெளியிட்ட காவேரி மருத்துவமனை, வீட்டிலிருக்கும் அவருக்கு தொடர்ந்து மருத்துவ உதவிகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், வீட்டிலிருந்தபடியே மருத்துவ உதவிகள் பெற்றுவரும் கருணாநிதியை நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து இருவரும் இன்று (சனிக்கிழமை) நேரில் சந்தித்து உடல்நலம் விசாரித்தனர்.
சுமார் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.