நெல்லித்தோப்பு தொகுதி: புதுவை முதல்வர் நாராயணசாமி வெற்றி!
புதுவை நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில், தி.மு.க. ஆதரவு பெற்ற காங்கிரஸ் வேட்பாளரும் அம்மாநில முதல்வருமான வி.நாராயணசாமி, பாரதிய ஜனதா கட்சி மற்றும் முன்னாள் முதல்வர் ரங்கசாமி ஆதரவு பெற்ற அதிமுக வேட்பாளர் ஓம்சக்தி சேகரை 11144 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
வாக்குகள் விவரம்:
மொத்தம் – 26564
வி.நாராயணசாமி (காங் )- 18709
ஓம்சக்தி சேகர் (அதிமுக) – 7565
நோட்டா – 334
ரவி அண்ணாமலை (நாம் தமிழர்) – 90
ஆர்.ஆறுமுகம் (ஐக்கிய ஜனதாதளம்) – 56