மோடியின் “செல்லாது” அறிவிப்பை விளாசும் திருவள்ளுவர்!
‘உலகப் பொது மறை’ என போற்றப்படும் ‘திருக்குறள்’ நூலில், எக்காலத்துக்கும் எந்த நாட்டுக்கும் பொருந்தக்கூடிய திருக்குறள்களில் ஒன்று இது.
56ஆம் அதிகாரத்தில் ‘கொடுங்கோன்மை’ என்ற தலைப்பின் கீழ் நமது முப்பாட்டன் வள்ளுவன் இந்த திருக்குறளை அன்றே எழுதியிருக்கிறான். அது:-
“வேலொடு நின்றான் இடு என்றது போலும்
கோலொடு நின்றான் இரவு”
இதன் பொருள்:-
“அதிகாரத் திமிரில் ஓர் ஆட்சியாளன், தன் குடிமக்களிடம், திடீரென வழக்கமில்லாத பொருளை கேட்பது, ஆயுதத்தோடு மறைந்திருக்கும் வழிப்பறி கொள்ளைக்காரன் திடீரென்று முன்னால் வந்து, ‘உன்னிடம் இருப்பதை எல்லாம் கொடு’ என்று கொள்ளை அடிப்பதற்கு சமம்.”
ஏழை, எளிய மக்களையும், நடுத்தர வர்க்கத்து மக்களையும் பணத் தட்டுப்பாட்டில் தவிக்க விட்டிருக்கும் நரேந்திர மோடியின் ரூபாய் நோட்டு நடவடிக்கைக்கு இந்த திருக்குறள் பொருத்தமாக இருக்கிறதா, இல்லையா?
வள்ளுவன்’டா…!
(மூலம்: வாட்ஸ்அப்-ல் வந்தது)