‘தாதா சாகேப் பால்கே’ விருது பெற்றார் நடிகர் ரஜினிகாந்த்
ஒவ்வொரு ஆண்டும் திரைத்துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கும் கலைஞர்களுக்கு இந்திய ஒன்றிய அரசு விருதுகள் வழங்கி கவுரவித்துவருகிறது. அந்த வகையில், 2019ஆம் ஆண்டுக்கான விருதுகள் கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப்பட்ட நிலையில், கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்ட விருது வழங்கும் விழா இன்று (25-10-2021) டெல்லியில் நடைபெற்றது.
இந்த விருது வழங்கும் விழாவில் இந்திய குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, ஒன்றிய அமைச்சர்கள் அனுராக் தாக்கூர், எல்.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
‘அபூர்வராகங்கள்’ படம் மூலம் நடிகராக அறிமுகமாகி, 46 வருட திரைப்பயணத்தில் எண்ணற்ற சாதனைகள் படைத்து, உலகம் முழுக்க ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகர் ரஜினிகாந்துக்கு இந்திய ஒன்றிய அரசின் உயரிய கலைத்துறை விருதான ‘தாதா சாகேப் பால்கே’ விருது இன்றைய விழாவில் வழங்கப்பட்டது. இந்த விருதினை ரஜினிக்கு துணை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வழங்கினார்.