அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தேர்தல் தேதி: அடுத்த வாரம் அறிவிப்பு!
அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு அதிகளவில் பணப்பட்டுவாடா நடந்ததாக எழுந்த புகாரின் அடிப்படையில் அரவக்குறிச்சி மற்றும் தஞ்சை தொகுதிகளில் தேர்தலை ரத்து செய்தது தேர்தல் ஆணையம்.
அதோடு, திருப்பரங்குன்றம் தொகுதி அ.தி.மு.க. உறுப்பினர் இறந்ததால் அந்த தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடத்த வேண்டியுள்ளது.
இம்மூன்று தொகுதிகளுக்குமான தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.