”2G ஸ்பெக்ட்ரம் ஊழல்” பாஜக தொடுத்த அரசியல் மோசடி
மன்மோகன்சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி ஆட்சி UPA II காலத்தில், 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் ஊழல் நடைபெற்றதாக கூறி அப்போதைய CAG தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய் அறிக்கையளித்தார். அந்த அறிக்கையில், இழப்பு மதிப்பு / Loss ரூ.1.76 லட்சம் கோடி என குறிப்பிடப்பட்டது.
இவ்வாறு ஒரு பெரிய அளவிலான ஊழல் குற்றச்சாட்டை அதுவரை இந்தியா பார்த்ததே இல்லை. பலராலும் இந்த ஊழல் கணக்கை எழுத்தால் கூட எழுத முடியவில்லை. ஒரு பிரபல ஆங்கில செய்தித்தாள், இவர் கூறிய ஊழல் கணக்கின் வீரியத்தை சொல்ல, எண்ணுக்கு பின்னால், பூஜ்யம், பூஜ்யம் என முழுபக்க அளவில் எழுதி தலைப்பிட்டது.
பாஜகவும், அதிமுகவும் பரபரப்பான தாக்குதலை ஆ.ராசா மீதும், திமுக மீதும் தொடுத்தன. சில மத்திய அமைச்சர்கள் பதவி விலகினர். ஐக்கிய முற்போக்கு கூட்டணி 2014-ம் ஆண்டு தேர்தலில் படுதோல்வி அடைந்து ஆட்சியை இழக்க காரணமாக அமைந்த குற்றச்சாட்டுகளில் இது முக்கியமானது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அப்போதைய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் பின்னாளில் குற்றமற்றவர்கள் என நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டனர்.
தற்போது 5G அலைக்கற்றை ஏலம் நடந்துள்ளது. மொத்தம் 1.5 இலட்சம் கோடிக்கு தான் விற்பனை ஆகியுள்ளது. 5G யே 1.5 இலட்சம் கோடிக்கு தான் போயுள்ளது. இதுதான் நிலைமை எனில்… 15 ஆண்டுகளுக்கு முந்தைய 2G அலைக்கற்றை 1.76 இலட்சம் கோடிக்கு விற்பனை செய்து இருக்க வாய்ப்பு இருந்தது என எப்படி, ஏன் வினோத் ராய் சொன்னார்?
“2G ஸ்பெக்ட்ரம் விற்பனை – 1.76 இலட்சம் கோடி ரூபாய் ஊழல்” என்ற முழு கதையும், மன்மோகன் சிங் தலைமையிலான UPA II ஐ வீழ்த்த, பாஜக எடுத்த முயற்சியாகும், இதில் முன்னாள் CAG அதிகாரி வினோத் ராய் உடந்தையாக இருந்திருக்கிறார் என்பது மட்டும் தெளிவாகிறது.
¶பாஜக மன்னிப்புக் கேட்க வேண்டும்! ¶முன்னாள் தலைமை கணக்கு தணிக்கை அதிகாரி வினோத் ராய்க்கு தண்டனை வழங்கப்பட வேண்டும்.
Chandra Mohan