‘24’ வில்லன் சூர்யா கதாபாத்திரத்துக்கு இன்ஸ்பரேஷன் இவர்தான்!
![](http://www.heronewsonline.com/wp-content/uploads/2016/05/0a2n.jpg)
இவர் பிரபல விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் (Stephen William Hawking).
நியூட்டன், ஐன்ஸ்டீன் போன்றோர் வரிசையில் இன்று உள்ள பிரசித்திபெற்ற கோட்பாட்டு இயற்பியல் விஞ்ஞானி இவர்.
பிரபஞ்சத் தோற்றவியல், குவாண்டம் ஈர்ப்புவிசை, கருந்துளை போன்ற துறைகளில் இவரது கண்டுபிடிப்புகளும், பொது இயற்பியலில், ரோஜர் பென்ரோஸுடன் சேர்ந்து இவர் ‘சிங்குளாரிட்டி’ பற்றி கூறியுள்ளவையும் முக்கியமானவை.
கருந்துளைகளிலிருந்து வரும் கதிர்வீச்சு ஒன்று, ‘ஹாக்கிங் ரேடியேசன்’ என்றே அழைக்கப்படுகிறது.
அறிவியலைப் பற்றி ஜனரஞ்சகமாக இவர் எழுதிய A Brief History of Time என்ற நூல் விற்பனையில் சாதனை படைத்தது. தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
மூளைநரம்பு முடக்க நோயால் பாதிக்கப்பட்டு படிப்படியாக தனது உடற் செயல்பாட்டை இழந்த இவர், இன்று தலையால் மட்டுமே வாழும் விந்தை மனிதர்.
இவர் தான் ‘24’ படத்தில் வில்லனாக வரும் சூர்யா கதாபாத்திரத்தை வடிவமைப்பதற்கான இன்ஸ்பரேஷன். இப்படத்தில் உடற் செயல்பாட்டை இழந்து தலையால் மட்டுமே வாழ்ந்துகொண்டு சூர்யா செய்யும் வில்லத்தனம் அனைவராலும் வியந்து பேசப்படும் என்கிறது ‘24’ படக்குழு.