மூன்று கோணங்களில் நடக்கும் காமெடி கலந்த காதல் கதை ’ஸ்வீட்டி நாட்டி கிரேஸி’!

Arun Visualz என்ற புதிய பட நிறுவனம் சார்பில் V. M.R.ரமேஷ், R. அருண் இருவரும் இணைந்து தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் பிரமாண்டமாக தயாரிக்கும் படத்திற்கு  “Sweety Naughty Crazy” என்று இளமை ததும்பும் கலகலப்பான பெயரை வைத்துள்ளனர்.

சூப்பர் ஹிட் படமான உளவுத்துறை படத்தின் இயக்குனர் ரமேஷ் செல்வனிடமும்.  மற்றும் பல படங்களிலும் இணை இயக்குனராக பணியாற்றிய G.ராஜசேகர் இந்த படத்தை இயக்குகிறார்.

தமிழ் தெலுங்கு, ஹிந்தி உட்பட பல மொழி படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பிரபல பான் இந்திய பெண் ஒளிப்பதிவாளர் C. விஜய ஸ்ரீ M. A. D. F. Tech இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

கோலிசோடா, கடுகு, சண்டிவீரன் போன்ற வெற்றி படங்களுக்கு இசையமைத்த அருணகிரி இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

எடிட்டிங் – K. குமார்

பாடல்கள் –  சினேகன், பாஸ்கர்

ஜெயகுமார் கலை இயக்குனராக பணிபுரிகிறார்.

நடனம் – ராதிகா

மக்கள் தொடர்பு – புவன் செல்வராஜ்

R. அருண்

கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – G.ராஜசேகர்

தெலுங்கில் 10க்கும் மேற்பட்ட படங்களில் நாயகனாக நடித்ததோடு தமிழில் தங்கமகன், டெவில், கடாவர் போன்ற படங்களில் நடித்த த்ரிகுண்  இந்த படத்தின் கதாநாயகனாக நடிக்கிறார்.

ஸ்ரீ ஜீத்தா கோஷ், இனியா, ராதா ஆகிய மூவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். மற்றும் ரவி மரியா, தம்பி ராமையா, சத்யன், சாம்ஸ்,மதன்பாபு, விஜய் டிவி தனசேகர், வினோத் இவர்களுடன் பிரபல தெலுங்கு நடிகர் ஆளி, ரகு பாபு ஆகியோர் நடிக்கிறார்கள்.

”மூன்று வெவ்வேறு விதமான காதலை மையமாக வைத்து மூன்று  கோணங்களில் நடக்கும்  முழுக்க முழுக்க காமெடி கலாட்டாதான் இந்த படம்.

இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஏற்ற டிரெண்டிங்கான படமாக இருக்கும்.

படம் பார்க்க வரும் அனைவரும் துவக்கம் முதல் இறுதிவரை சிரித்து மகிழ வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். அப்படியான காமெடி சரவெடியான திரைக்கதை இது.

தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் படப்பிடிப்பை நடத்தி வருகிறோம். ஹைதராபாத்,கோவை, கோத்தகிரி போன்ற இடங்களில் படப்பிடிப்பு  நடைபெற்றுள்ளது. தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது” என்றார் இயக்குனர் G. ராஜசேகர்.